“நமது வீரர்கள் செய்த தியாகம் ஒருபோதும் வீண்போகாது”…!!! இந்திய விமானப்படை தளபதி…!!!

அமைதியைக் காக்க நாடு எப்போதும் பாடுபடும் எனவும் கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் செய்த தியாகம் வீண்போகாது என இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ் பதோரியா தெரிவித்துள்ளார்.

இந்திய – சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த 16 ஆம் தேதி இரவு கடும் மோதல் நடைபெற்றது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதனால் மீண்டும் எல்லையில் பதற்றம் நிலவி வருவதோடு இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றனர். இதனிடையே எல்லையில் உள்ள சூழலை சமாளிக்க இந்திய போர் விமானங்களும் எல்லையை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமைதியை காக்க இந்தியா எப்போதும் பாடுபடும் எனவும் கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் செய்த ‘தியாகம் வீண்போகாது என இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதோரியா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் அருகே உள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், மிகவும் சவாலான சூழ்நிலையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்தியாவின் இறையாண்மையை எந்தவொரு விலை கொடுத்தாவது பாதுகாக்கும் எங்கள் தீர்மானத்தை நிரூபித்துள்ளது என தெரிவித்தார். எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்த அவர், கல்வானில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம் என்று தான் இந்த தேசத்திற்கு உறுதியளிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நமது பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நமது ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது; சீன நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருந்த போதிலும், இரு நாட்டு ராணுவப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகள் எட்டப்பட்டதால், எல்லை பிரச்னையை தற்போதைக்கு அமைதியாக சரிசெய்யப்படுவதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே