Jio அறிவித்த அடுத்த இலவசம்; JIO MEET ஆப்பை களமிறக்குகிறது !!

உலகம் முழுதும் கொரானா பாதிப்பால் இயல்பான வாழ்க்கை பெரிதும் தடை பட்டு உள்ளது. பல நாடுகளில் அரசு ஆலோசனைகள், முக்கிய சந்திப்புகள் கூட ஜூம் மீட் எனப்படும் செயலி மூலமாக நடந்து வருகிறது.

இந்த ஜூம் மீட் செயலி பாதுகாப்பானதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

தனி நபர் தகவல்களை ரகசியம் காக்க தவறுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த நிலையில் இத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பிரதமர் மோடி தொடங்கி பல அரசியல் கட்சி தலைவர்களும் ஜூம் மீட் செயலி மூலமாக பல கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்போது ஜூம் மீட் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனம் புதிதாக ஜியோ மீட் என்ற செயலியை அறிமுகபடுத்தி உள்ளது. 

தற்போது சோதனை முயற்சியாக இந்த ஜியோ மீட் செயலி பிளே ஸ்டோரில் உள்ளது.

ஜூம் செயலியை விட நல்ல தெளிவான காட்சியமைபும், சுலபமான இணைப்பு வசதிகளும் உள்ளது இதன் பிளஸ்.

எனவே இதனை அதிகமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் கடும் போட்டி நிலவ வாய்ப்பு இருக்கிறது..

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே