173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சற்று நேரத்தில் வெளியிடுகிறார் மு.க. ஸ்டாலின்..!!

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகிறது. தமிழகத்தில் வேட்பு மனு இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது.

இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்யிடுகின்றனர்.

173 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளதாக தெரிகிறது. நாளை திமுக தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவடைந்ததால் கடைசியாக தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.

முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து, மரியாதை செலுத்த உள்ளார் மு.க.ஸ்டாலின்.

மேலும் தாயார் தயாளு அம்மாளிடமும் ஸ்டாலின் ஆசி பெற்றுள்ளார். பகல் 12.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்திலிருந்து வெளியாகிறது. இந்த முறை, புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே