விஜய் கொடுத்த முத்தம் தான் எங்கள் நட்பின் அடையாளம்: விஜய் சேதுபதி.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தனக்கு கொடுத்த முத்தம் தான் தங்களுக்கு இடையேயான ஆழமான நட்பின் அடையாளம் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி தனக்கு நெருக்கமானவர்கள் அல்லது ரசிகர்களை பார்த்தால் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுப்பார். விஜய் சேதுபதியிடம் முத்தம் வாங்கிய ரசிகர்கள் பலர் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவரை புகழ்ந்து பேசியுள்ளனர்.
சார், நான் உங்கள் ரசிகன் என்று மட்டும் தான் சொன்னேன். அவராகவே என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். என்ன மனுஷன்யா, பெரிய ஹீரோ என்கிற பந்தாவே இல்லாமல் இருக்கிறாரே என்று விஜய் சேதுபதியிடம் முத்தம் வாங்கிய பலர் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் அவர் பொசுக்கு பொசுக்குனு முத்தம் கொடுப்பதை கலாய்த்து மீம்ஸும் போடுகிறார்கள். கல்யாண வீட்டிற்கு சென்றால் மாப்பிள்ளைக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார் விஜய் சேதுபதி. என்றாவது ஒரு ஃப்ளோவில் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுக்காமல் இருந்தால் சரி தான் என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்த கதையும் உண்டு.

சரி விஷயத்திற்கு வருவோம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்தபோது தனக்கெல்லாம் முத்தம் கிடையாதா என்று விஜய் விஜய் சேதுபதியிடம் கேட்டிருக்கிறார். உங்களுக்கு இல்லாமலா சார் என்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. அவர் விஜய்க்கு முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது.
இதையடுத்து மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவராகவே விஜய் சேதுபதியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அவ்வளவு சீக்கிரத்தில் அதுவும் பட விழாவில் விஜய் யாருக்கும் முத்தம் கொடுக்க மாட்டார். அப்படிப்பட்ட விஜய்யே முத்தம் கொடுத்ததை பார்த்து வியக்காதவர்களே இல்லை.
இந்நிலையில் அந்த முத்தம் குறித்து விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

விஜய்யுடன் சேர்ந்து நடித்தது சவுகரியமாக இருந்தது. விஜய் ரொம்ப நட்பாக பழகுபவர். எங்களுக்கு இடையேயான ஆழமான நட்பின் அடையாளம் தான் மாஸ்டர் விழாவில் விஜய் எனக்கு கொடுத்த முத்தம் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே