தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்துக்கு அக்டோபர் 17 முதல் 27 வரை விடுமுறை..!!

தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சி.குமரப்பன் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அக்.17 முதல் 27 வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றும்; அவசர வழக்குகளுக்கு அக்.20ல் மனுதாக்கல் செய்தால் அக்.22ல் விசாரணை நடைபெறும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே