பஞ்சாப் அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி..!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

சார்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பின்ச் மற்றும் படிக்கல் களமிறங்கினார்கள், பின்ச் (20), படிக்கல் (18) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின் களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாடி 48 ரன்கள் சேர்த்த போது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

வாஷிங்டன் 13 ரன்களிலும், துபே 23 ரன்களிலும் அவுட்டாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் ஷமி பந்தில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மோரீஸ் ஷமியின் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி அடித்து 8 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே