தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாளை மறுநாள் (செப்.7) முதல் மாநிலத்திற்குள் மீண்டும் ரயில் சேவை தொடங்கிறது.

சென்னையில் இருந்து மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கும், மறுமார்க்கத்தில் இப்பகுதிகளில் இருந்து சென்னைக்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்தவகையில் தமிழகத்தில் மொத்தம் 13 ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

அனைத்துப் பயணிகளும் பயண நேரத்திற்கு 90 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையம் வர வேண்டும் என்றும், கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயில் நிலையத்தில் கொரோனா நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் பேருந்து முன்பதிவு தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் ரயில் சேவைக்கான முன்பதிவு தொடங்குவதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதாக உணர்கின்றனர்.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் தொடர்வதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே