ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448 குறைந்து ரூ.38,112-க்கு விற்பனை..!!

சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை நேற்றைவிட ஒரு சவரனுக்கு 448 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று மாலை 22 காரட் தங்கம் ஒரு கிராம் 4820 ரூபாயாக இருந்தது.

இன்று மாலை 56 ரூபாய் குறைந்து 4764 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் நேற்று சவரன் தங்கம் விலை 38 ஆயிரத்து 560 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 38 ஆயிரத்து 112 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இதேபோலக் கட்டி வெள்ளியின் விலையும் நேற்று ஒரு கிலோ 63 ஆயிரத்து 300 ரூபாயாக இருந்த நிலையில் இன்று மாலை 60 ஆயிரத்து 400 ரூபாயாகக் குறைந்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே