காஞ்சிபுரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய எம்எல்ஏவின் தந்தை

திருப்போரூர் எம்எல்ஏவாக திமுகவை சேர்ந்த இதயவர்மன் பதவி வகிக்கிறார். இதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமாருக்கும் இதயவர்மனுக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. குறிப்பாக சாலை அமைப்பதில் இமயம் குமாரின் நிலத்தை இதயவர்மன் ஆக்ரமிப்பதாக ஏற்கனவே குற்றசாட்டு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நிலம் ஆக்ரமிப்பு தொடர்பாக இமயம் குமார் 40க்கும் மேற்பட்ட தன்னுடைய ஆதரவாளர்களுடன் இதயவர்மன் அலுவலகத்துக்கு சென்று இருக்கிறார். அங்கு நடந்த கடும் வாக்குவாதத்திற்கு பிறகு இரு தரப்பிற்கும் மோதல் வெடித்துள்ளது. எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சிமிபதி மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து இதயவர்மனின் தந்தை லட்சிமிபதி துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார், அந்த இரண்டு குண்டுகளும் இமயம் குமாரின் கார் கண்ணாடி மீது பாய்ந்துருக்கிறது, கண்ணாடி தெறிப்பில் இமயம் குமார் காயம் ஏற்பட்டதாக கூறி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டதாக கூறி இதயவர்மன் குடும்பத்தினர் திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்கள்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திருப்பேரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 399 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே