இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33,10,234 இல் இருந்து 33,87,501 ஆக உயர்வு

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக நேற்று ஒரே நாளில் 77,760 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 501 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 61,529 -ஆக அதிகரித்தது.

நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 77,266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 1,057 போ உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 61,529 -ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நோய்த்தொற்றுக்காக 7,42,023 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 25,83,948 ஆகவும், குணமடைந்தோரின் சதவீதம் 76.24 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவலின்படி ஆகஸ்ட் 27- ஆம் தேதி வரை 3,94,77,848 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் நேற்று வியாழக்கிழமை 9,01,338 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதிப்பு: 33,87,501
பலி: 61,529
குணமடைந்தோர்: 25,83,948
சிகிச்சை பெற்று வருவோா்: 7,42,023

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே