முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி..!!

பல்வேறு சலசலப்புக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரசின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகள், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் வேட்பாளர்கள் ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. காங்கிரஸ் சார்பில் உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டது டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்டது.

அதிலிருந்தே தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட தொடங்கியது.

அதில் உச்சமாக நேற்று காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிரசாத் சென்னை சத்தியமூர்த்திபவனில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு எதிராக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மாலை கே.எஸ்.அழகிரி, விஷ்ணுபிரசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து விஷ்ணுபிரசாத் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கன்னியாக்குமரி மக்களவை இடைத் தேர்தலில், மறைந்த வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் மயுரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் கே.செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார்.

விளவங்கோடு உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே