குடியுரிமை திருத்தச் சட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது – தொல்.திருமாவளவன்

குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டங்களை திசை திருப்புவதற்காக சிலர் வேண்டுமென்றே கருத்துக்களை தெரிவிப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார்.

மக்களை இணைக்கும் வலிமை பெற்ற அன்பு மற்றும் கருணையுடன் வாழ வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது என குறிப்பிட்ட அவர், அதற்கான போராட்டங்களை திசை திருப்புவதற்காக சிலர் வேண்டுமென்றே கருத்துக்களை தெரிவிப்பதாக சாடினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே