சென்னை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக வர்த்தப் பிரிவினர் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது, கூட்டுறவு முறையில் பால் வியாபாரம் செய்பவர்கள் மாடுகளை அழைத்துச் சென்று விடுகிறார்களா? என்று வேளாண் சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
விவசாயிகளிடம்தான் மாடு உள்ளது. தற்போது பால் உற்பத்தியில் இந்தியாதான் நம்பர் ஒன் நாடாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் நிலம் பறிபோகும் என்ற பொய் பிரச்சாரத்திற்கு எப்படி பதில் சொல்ல முடியும்?.
வேளாண் சட்டங்களால் வரக்கூடிய ஆதாயம் வேண்டாம்; இடைத்தரர்களின் ஆதாயம் முக்கியம் என எதிர்க்கின்றனர். பொய் பிரசாரம் செய்து அரசியல் செய்யும் சூழல்தான் நாட்டில் உள்ளது.
தமிழகத்திற்கு நல்லாட்சி கிடைக்க வேண்டும்; வேல் யாத்திரையால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்றார்.
பாஜக அதிமுக கூட்டணியால் எதிர்கட்சிகளுக்கு ஒருவித பயம் வந்துவிட்டது.
தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்.பி கூட இல்லாதபோதும் குறை வைக்காமல் செயலாற்றி வருகிறார் பிரதமர் மோடி.
2014 முதல் தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை தந்துகொண்டிருப்பது பாஜக அரசு தான். நாங்கள் இடையூறு அரசியல் செய்பவர்கள் அல்ல; தமிழகம் வளர்ச்சியடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.