அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகையையொட்டி வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி.. (VIDEO)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை வரவேற்க இந்தியா ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாளை இந்தியா வரும் நிலையில், அகமதாபாத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி குறித்த பொதுமக்களின் பார்வை தொடர்பான வீடியோவை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ட்ரம்பை வரவேற்க இந்தியா எதிர்நோக்கி காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாளை அவர் வரலாற்று சிறப்புமிக்க நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, நம்முடன் பங்கேற்பார் என்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே