தாய்லாந்து : அரசுக்கு எதிராக வீதிகளில் மக்கள் போராட்டம்..!!

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு நீடித்து வரும் மன்னராட்சியில் மறுசீரமைப்பு கோரியும், பிரதமர் பதவி விலக வலியுறுத்தியும் பேரணியில் ஈடுபட்ட மக்கள் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை கலைக்கும் போலீசாரின் முயற்சியை சமாளிக்க, போராட்டக்காரர்கள் ரெயின் கோட், குடை, கண்ணாடி மற்றும் தலைக்கவசம் போன்றவற்றை அணிந்தவாறு போராடினார்.

மேலும், இரவு நேரங்களில் செல்போன் டார்ச்களை ஒளிரவிட்டும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே