“பள்ளிவாசலில் தமிழிலா பாங்கு ஒலிக்கிறார்கள்?” – ஹெச்.ராஜா விமர்சனத்துக்கு தி.மு.க நிர்வாகி அப்துல்லாஹ் பதிலடி

மத விசயங்களில் அவரவர் பிரச்சனையை அவரவர் பார்த்துக் கொண்டால் ஒரு பிரச்சனைக்கும் வழியில்லை என்று திமுக ஐடி பிரிவு துணைச் செயலாளர் எம்.எம்.அப்துல்லாஹ் கூறியுள்ளார்.

பள்ளிவாசல்களில் தமிழிலா பாங்கு ஒலி செய்கிறார்கள், வழிபடுகிறார்கள் என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில், ஹெச்.ராஜா விமர்சனத்துக்கு தி.மு.க ஐ.டி பிரிவு துணைச் செயலாளர் எம்.எம்.அப்துல்லாஹ் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்த எம்.எம்.அப்துல்லாவின் பதிலில்,

  • தமிழக இஸ்லாமியர் யாரும் அல்லாஹ்வைத் தமிழ்க் கடவுள் என்று சொல்லவில்லை.
  • அது அரேபியாவில் இருந்து வந்த தெய்வ வழிபாடு என்று தெரிந்துதான் மதம் மாறினார்கள்.
  • அரபி மொழி வழிபாட்டை ஏற்றார்கள்.
  • தமிழ்க் கடவுள் என்று சொல்கின்ற என் முருகனுக்கும் அவன் அப்பனுக்கும் எதற்கு அடுத்த மொழியில் வழிபாடு என்று உங்கள் மதத்தவரே உங்களை நோக்கிக் கேட்டால் அதற்கு நியாயமான பதிலை நீங்கள் அளியுங்கள்.
  • அதைத் தவிர்த்து பள்ளிவாசலில் ஏன் அரபியில் ஓதுகிறார்கள் என்று கேட்பது அறியாமை.
  • காரணம் அங்கே அரபியில்தான் ஓதுவார்கள் எனத் தெரிந்துதான் இங்குள்ளவர்கள் மதம் மாறினர்.

அதேபோல, சில இஸ்லாமியர்கள் கோவிலில் வேற்று மொழி அர்ச்சனை குறித்து கருத்து சொல்வதும் தேவையில்லாத வேலை. அது அவர்கள் பிரச்சனை.

மத விசயங்களில் அவரவர் பிரச்னையை அவரவர் பார்த்துக் கொண்டால் ஒரு பிரச்னைக்கும் வழியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே