இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்

மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக, தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த மாதம் 14-ஆம் தேதி தாக்கல் செய்தார்.

நான்கு நாள்கள் அவை நடைபெற்றபின் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில்  நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இன்று முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இன்று அவை கூடியதும், மறைந்த  உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

பல்வேறு துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீது புதன்கிழமை முதல் விவாதம் நடத்தப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டம்,  மக்கள்தொகை பதிவேடுக்கான கணக்கெடுப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே