உடல் உறுப்பு தானம் வழங்குவதில் முதன்மையாக விளங்கும் தமிழ்நாடு

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குவதற்காக தொடர்ந்து ஐந்தாவது முறையாக மத்திய அரசின் விருதை பெற்றுள்ளது.

இந்த விருதை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெற்றார்.

டெல்லியில் நடைபெற்ற பத்தாவது உறுப்பு தான நாள் நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு மொத்தமாக மூன்று விருதுகள் கிடைத்தன.

உடல் உறுப்பு தானத்தில், தேசிய உறுப்பு மற்றும் திசு பெயர்த்தமை அமைப்பில் பதிவு செய்ததில் தமிழகம் தொடர்ந்து முதன்மையாக இருப்பதற்காக, இவ்வாண்டு ஐந்தாவது முறையாக தமிழக சுகாதாரத்துறை விருதைப் பெற்றது.

இரண்டாவதாக உடல் உறுப்பு தானத்தில் மிகச் சிறப்பாக செய்யக் கூடிய மருத்துவமனையாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை விருதைப் பெற்றது.

மூன்றாவதாக இரண்டு கைகளையும் இழந்தவருக்கு இறந்தவரின் கைகளை பொருத்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட ஸ்டான்லி மருத்துவமனையில், இந்த அறுவை சிகிச்சையை தலைமை ஏற்று நடத்திய மருத்துவர் ராமாதேவிக்கு விருது என மொத்தம் மூன்று விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்தன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே