தமிழகத்தில் 13 வகையான ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

இதுவரை இந்தியாவில் 4000க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 690 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இரும்பு, சிமெண்ட், உரம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயனம், ஜவுளித்துறை, சர்க்கரை ஆலை, கண்ணாடி ஆலை, காகிதம், டயர், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, தோல் பதினிடும் ஆலை, உருக்கு ஆலை ஆகிய தொழிற்சாலைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

குறைவான பணியாளர்களை கொண்டு ஆலைகளை இயக்க தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே