ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தமிழ் சினிமா முன்னேற்றம் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஓடிடியில் படங்கள் வெளியாவதை தடுக்க சட்டம் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை.

50% இறக்கைகளுடன் தியேட்டர்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்த நிலையிலும், தமிழக அரசு அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.

அதனால் கடந்த 20ம் தேதி தியேட்டர் உரிமையாளர்கள் முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே ரிலீஸ் ஆகாமல் படங்கள் அனைத்தும் கிடப்பில் இருப்பதால் ஓடிடியில் வெளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

க/பெ ரணசிங்கம், சூரரை போற்று, பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின. 

இதே நிலை தொடர்ந்தால் இன்னும் பல படங்கள் ஓடிடியில் வெளியாகும் என்றும் திரைப்பட தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “ஓடிடி மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடியாக படங்களை வெளியிடுவதை தடுக்க தனிச் சட்டம் இல்லை.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது. தமிழ் சினிமா வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும்” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே