டி – சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது – வானதி சீனிவாசன்

டி-ஷர்ட்டால் மொழி வளராது என பாஜகவின் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் இந்தி தெரியாத காரணத்தினால் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது கூடுதல் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

சமீபத்தில் திமுக எம்பி கனிமொழி விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் தான் அவமதிக்கப்பட்டதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

பின்னர் தமிழக மருத்துவர்கள் கலந்து கொண்ட ஆயுஷ் கூட்டத்தில் இந்தி தெரியாதவர்கள் பயிற்சி கூட்டத்தில் வெளியேறுமாறு அதன் செயலர் கூறியது அதிர்ச்சியை கொடுத்தது.

அத்துடன் சமீபத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன், விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் தன்னை தீவிரவாதிகள் என அங்குள்ள அதிகாரிகள் கூறியதாக பொதுவெளியில் தெரிவித்தது கூடுதல் பரபரப்பை கிளப்பியது.

இதை தொடர்ந்து நடிகர், நடிகைகள் பலர் I am a தமிழ் பேசும் indian, இந்தி தெரியாது போடா? என்று பதிவிட்ட டிஷர்ட்டுகளை போட்டபடி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன், ” டி-ஷர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்து எடுக்க முடியாது.

மொழி திணிப்பு என்பதை பாஜகவும் எதிர்க்கிறது. மேலும் ஒரு மொழியை கற்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே