“தலனா அது அஜித் தான்.. தோனி இல்ல; தளபதி-னா அது ஸ்டாலின் தான்”… மீண்டும் விஜயை சீண்டும் மீரா!!

கடந்த சில நாட்களாக மீராமிதுன் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து மாஃபியா, நெபோட்டிசம் என்றெல்லாம் பேசி வந்தார். விஜய், சூர்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். குறிப்பாக விஜய்யை தான் மீரா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. அதனை பார்த்த தமிழக ரசிகர்கள், அவரை பாராட்டியும், வருத்தம் தெரிவித்தும் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் தமிழக ரசிகர்கள் தல என்ற பெயரை சூட்டி வந்ததால் அவர் செல்லமாக தல தோனி என்றே அழைக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில், உங்களுக்கு தமிழ்நாடு இருக்கு தல, நாங்கள் இருக்கிறோம். உங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம் தல என்று ரசிகர்கள் பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தோனி பற்றி மீரா மிதுன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “தோனி சென்னையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். மேலும், தல தோனி சென்னையில் இருக்கிறார் என்று மீடியாக்கள் அறிவித்தன. உங்களுக்கு நான் ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தலனா அது அஜித் குமார் தான். தளபதினா அது மு.க. ஸ்டாலின் தான்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஜய் ரசிகர்கள் மீரா மிதுன் மீது செம கடுப்பில் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர் விஜய்யை குத்திக் காட்டி போட்ட டீவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே