ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார் எஸ்.வி.சேகர்! – முதல்வர் பழனிசாமி

இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

பின்னர், திண்டுக்கல்லில் ரூ.8.69 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் அதில் மாற்றமில்லை என கூறினார்.

இதையடுத்து, நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி.சேகர் பெரிய தலைவர் இல்லை, அவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஏதாவது பேச வேண்டியது வழக்கு வந்தால் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வது எஸ்.வி.சேகரின் வழக்கம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும், எஸ்.வி.சேகர் அதிமுகவில் சரியாக செயல்படாததால் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

எஸ்.வி.சேகர் பாஜகவில் தான் இருக்கிறாரா..? பிரச்சாரத்திற்கு வரவில்லை..? ஸ்ரீ எங்களுக்கு ஹிந்தி தெரியும் என எஸ்.வி.சேகருக்கு எப்படி தெரியும்? என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே