சென்னையில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை பாதுகாக்க நடவடிக்கை!

சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் மிகப்பெரிய அளவில் வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்து பெரும் சேதங்களை விளைவித்து என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த வெடி விபத்தால் சுமார் 70 பேர்களுக்கு மேல் மரணமடைந்ததாகவும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த வெடி விபத்து குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் டன் கணக்கில் அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் இருப்பு வைத்திருந்ததாகவும்; அந்த அமோனியம் நைட்ரேட் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் அதில் தீ பிடித்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இது குறித்து விசாரணை நடத்த லெபனான் அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த விபத்தை அடுத்து உலகம் முழுவதும் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டிருந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சற்று முன் வெளியான செய்தியின்படி சென்னையிலும் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 740 மெட்ரிக் டன் அளவில் இந்த இருப்பு உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது

விபத்து நடப்பதற்கு முன், சென்னையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே