அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை!

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிறுவனருமான அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த வாரம் ரிப்பப்ளிக் செய்தி நிறுவனத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் இரண்டு சாதுக்கள் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏன் மவுனம் காக்கிறார் என மூத்த பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி கேள்வியெழுப்பினார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யக்கோரியும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

மேலும் நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவர் மனைவி மீது 2 பேர் தாக்குதல் நடத்த முயன்றதாக அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என அர்னாப் கோஸ்வாமி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் அர்னாப் கோஸ்வாமியை 3 வாரங்களுக்கு கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அர்னாப் கோஸ்வாமி, இன்று கிடைத்த தீர்ப்பு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி எனவும் இந்திய மக்களுக்கும், நீதிபதிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே