அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் இந்தியாவில் இன்னும் ஓரிரு தினங்களில் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது முதல் குமரி வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் மேற்கு மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது தென்மேற்கு பருவமழை பொதுவாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருகில் துவங்கும் அந்த வகையில் தற்போது அந்தப் பகுதியில் துவக்கி உள்ளதாகவும் இந்திய நிலப்பரப்பில் அடுத்த சில தினங்களில் துவங்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- திருமாவளவனின் வெற்றியை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தனர் : வைகோ
- மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் பலி