மும்பையில் மீண்டும் தொடங்கிய புறநகர் ரயில் சேவை..!!

சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு, இந்தியாவில் மார்ச் மாத தொடக்கத்தில் பரவத் தொடங்கியது.

அதனையடுத்து, நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

திரையரங்குகள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டன. பேருந்துகள், ரயில்சேவைகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டன.

மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயங்கத் தொடங்கினாலும், மும்பையில் கொரோனா பாதிப்பின் காரணமாக புறநகர் மின்சார ரயில் செயல்பட அனுமதி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

சென்னையை விட பெரும் நெருக்கடியைக் கொண்ட மும்பையில் வேராக புறநகர் ரயில் இருந்துவருகிறது. தினம் தினம் லட்சக்கணக்கானவர்கள் புறநகர் ரயில்களை நம்பி தங்களது தினசரி நாள்களைக் கடத்திவருகின்றனர்.

அலுவலக வேலைத் தொடங்கி கூலி வேலை செய்பவர்கள் அனைவருடைய பயணத்துக்கும் மின்சார ரயில் தேவை இருந்தது. மின்சார ரயில் சேவை செயல்படாததால் மும்பைவாசிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இந்தநிலையில் பிப்ரவரி 1-ம் தேதியிலிருந்து புறநகர் ரயில் சேவை தொடங்குவதற்கு மும்பை அரசு அனுமதியளித்தது.

இந்தநிலையில், மும்பையில் புறநகர் ரயில் முன்பு தலைகுனிந்து இளைஞர் ஒருவர் மரியாதை செய்கிறார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தில் இருப்பவர் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. அந்தப் புகைப்படத்தின் கீழ் பலரும் புறநகர் ரயில்சேவையைப் புகழ்ந்து பதிவிட்டுவருகின்றனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே