20 நாடுகளுக்கு தடை விதித்தது சவூதி அரேபியா.!!

கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இந்தியா, அமெரிக்கா உட்பட 20 நாடுகளில் சவூதி அரேபியா வரும் அனைத்து விமான சேவைகளும் தடை செய்யப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து இந்தியாவில் இருந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் , தற்போது தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியல் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த தற்காலிக நாளை (ஜனவரி 4 )முதல் அமலுக்கு வருகிறது.

இருப்பினும், வெளியுறவுத் துறை அதிகாரிகள், சவுதி குடிமக்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடை பொருந்தாது.

லெபனான், துருக்கி, அயர்லாந்து, இத்தாலி, போர்ச்சுகல், சுவீடன், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், இந்தோனேசியா, பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து சவுதிக்கு அனைத்து விமானங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

இந்த தற்காலிக தடை அமல்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக தடைசெய்யப்பட்ட 20 நாடுகளில் பயணித்த பயணிகளுக்கும் இந்த தடை பொருந்தும் என்று சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

தற்போது, ​​சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 3.68 லட்சத்தைக் கடந்துள்ளது.

6,383 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே