பள்ளிக்கு செல்ல மாணவர்கள் படும்பாடு..; இராமநாதபுர அதிகாரிகள் கண்டுகொள்வார்களா??

இராமநாதபுரம் அருகே பள்ளியில் படிக்கும் மாணவர்கள், போதுமான பேருந்து வசதி இல்லாததால் தனியார் பேருந்துகளில் தொங்கிக் கொண்டே ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லுரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது.

கொரானா ஊரடங்கில் தளர்வு அறிவித்ததின் அடிப்படையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே பள்ளிக்கு பேருந்துகளில் செல்லும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்தது.

ஆனால், கோரிக்கை கோரிக்கையாக மட்டுமே இருந்தது. இதுவரை, அரசு போக்குவரத்துக்கழகத்தில் இருந்து போதுமான பேருந்துகளை விடவதில்லை.

அதனால் , தனியார் பேருந்தில் ஏறி பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து நயினார் கோவில் செல்லும் தனியார் பேருந்துகளில் மாணவர்கள் சாகச வீரர் போல தொங்கிக் கொண்டே சவாலான பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

பேருந்தின் படிக்கட்டுகள், பின்பகுதியில் இருக்கும் ஏணிகள் மற்றும் சுற்றுப்புற ஜன்னல் கம்பிகளில் மாணவர்கள் தொங்கிக் கொண்டு செல்கின்றனர்.

இந்த ஆபத்து மிகுந்த பஸ் பயணக்காட்சியை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வைரலாகப் பரவி வருகிறது.

இனியாவது, பள்ளி நேரத்தில் போதுமான அளவு பேருந்து வசதியை ராமநாதபுரம் அரசுப் போக்குவரத்துத்துறை ஏற்படுத்திக் கொடுக்குமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

படியில் பயணம் நொடியில் மரணம் என்று பேருந்துகளில் எழுதப்பட்டிருப்பது வாடிக்கை.

ஆனால், இங்கு படியில் மட்டுமல்ல பஸ்சுக்கு வெளியேவும் தொங்கிக் கொண்டு செல்வதை யாரும் தடுக்கவும் முன் வராததுதான் வேதனையாக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே