ஆன்லைனில் தேர்வை நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்..!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை : கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவரகள், கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி விட்டு, தற்போது நேரடி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன.

இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மாணவர்கள், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக் கோரி முழக்கமிட்டு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே