அமித்ஷா வீடு அருகே போராட்டம் – பிரணாப் முகர்ஜி மகள் கைது..!!

உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு அருகே போராட்டம் நடத்தியதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு அருகே டெல்லி மகளிர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்கள் முன்னேறுவதைத் தடுக்கும் வகையில் போலீசார் தடுப்புகளையும் அமைத்திருந்தனர்.

இத்தடுப்புகளையும் மீறி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்துக்கு தலைமை வகித்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகளும் டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவருமான ஷர்மிஸ்தா முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே