வர்த்தகத் தொடக்கத்தில், வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 356 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் நேற்றைய வர்த்தகத்தில் 59 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) சென்செக்ஸ் 356.95 புள்ளிகள் உயர்ந்து 59,498.11 என்ற புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. காலை 10.15 மணியளவில் 475.90 புள்ளிகள் உயர்ந்து 59,617.06 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் ‘நிஃப்டி’ இன்று காலை வர்த்தகத் தொடக்கத்தில் 103 புள்ளிகள் அதிகரித்து, 17,732.70 என்ற புள்ளிகளில் தொடங்கி தற்போது 131.70 புள்ளிகள் உயர்ந்து 17,761.20ல் வர்த்தகம் ஆகிறது.