இந்தியாவில் நவம்பர் மாதத்தின் நடுவில் கரோனா பதிப்பு உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கடந்த சில தினங்களாகவே ஒரு நாளில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை 8000 கடந்துகொண்டே இருக்கிறது.
நேற்று மட்டுமே 11502 பேருக்கு கரோனா பாதிப்பு உறிதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவில் கரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,32,424 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல, கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,69,789 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 9520 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் நவம்பர் மாதத்தின் நடுவில் (2வது வாரத்தில்) கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கரோனா வைரஸ் பாதிப்பின் உச்சம் தள்ளிப்போயுள்ளது.
பிற நாடுகளை ஒப்பிடுகையில் கரோனா பாதிப்பின் உச்சம் இந்தியாவில் 34 நாட்களில் இருந்து 76 நாட்களாக தள்ளிப்போயுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கிற்கு பிறகு 60% முனைப்புடன் கரோனா தடுப்பில் மத்திய சுகாதாரத்துறை இறங்கினால், நவம்பர் மாதத்தின் முதல் வாரம் வரையும் வெண்டிலேட்டர்கள், படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றின் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு 97%ஐ தொடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு காரணமாக 69% ஆக குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.