டெல்லியில் மதுபானங்களை வீட்டிற்கே சென்று விற்பனை செய்ய மாநில அரசு அனுமதி..!!

டெல்லியில் மொபைல் ஆப் மற்றும் இணையதளம் மூலம் மதுபானம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

எல்-13 என்ற உரிமம் வைத்திருப்பவர்கள் இந்திய மற்றும் வெளிநாட்டு பானங்களை வீடுகளுக்கே சென்று விநியோம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் ஆப், இணையதளம் ஆகியவற்றின் மூலம் ஆர்டர் செய்தால் மட்டும் மதுபானம் விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் மாணவர் விடுதி, அலுவலகம், கல்வி நிறுவனங்களுக்கு மதுபானங்கள் டெலிவரி செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லோரும் மதுபான விற்பனையில் இறங்கிவிட முடியாது.

எல்- 13 என்ற குறிப்பிட்ட உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே டோர் டெலிவரி செய்ய முடியும். கடந்த ஆண்டு மதுபானக்கடைகளில் மக்கள் அலைமோதியதை அடுத்து, உச்சநீதிமன்றம் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்வது குறித்து ஆலோசிக்க அறிவுறுத்தியது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தளர்வு உணவகங்கள், கிளப், பார்கள், மதுபானம் விநியோகிக்கும் ஹோட்டல்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே