இந்தோனேசியாவில் சிக்கியுள்ள 430 தமிழர்களை மீட்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலாக பல நாடுகளில் பரவி பலி எண்ணிக்கை உயர்த்தி கொண்டிருக்கிறது.

இந்த வைரஸ் மக்கள் கூடும் இடங்களில் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து தும்மலினால் வரும் நீர்திவலைகள் மூலம் பரவி வருகிறது.

இதனால் பல நாடுகளில் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளில் முக்கியாமன ஒன்று பொதுமக்கள் கூட்டமாக இருக்க கூடாது, ரோட்டில் நடமாடக்கூடாது என்று பல நாடுகள் உத்தரவிட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிநாடுகளுக்கு தொழில் ரீதியாகவும் மற்றும் சுற்றுலாவாகவும் சென்ற பயணிகள் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் அந்தந்த நாடுகளில் தவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தோனேசியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர முடியாமல் 430 குடும்பங்கள் தவித்து வருகின்றனர்.

இவர்கள் திமுக ஸ்டாலினுக்கு தங்களை மீட்க வேண்டும் என்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய, மாநில அரசுக்கு இந்தோனேசியாவில் தவிக்கும் 430 குடும்பங்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே போல் பல நாடுகளிலும், மாநிலங்களிலும் அநேக தமிழ் மக்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர்.

இவர்கள் தாயகம் திரும்புவதற்கு விமான போக்குவரத்தை ஏற்படுத்துமாறு பிரதமர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு பரீந்துரை கடிதம் அனுப்புயுள்ளார்.

அந்த கடிதத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே