எதிர்க்கட்சி துணைத்தலைவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் நெஞ்சு வலி காரணமாக சென்னை அருகே போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்சி தொடர்பான நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள வீட்டில் இருந்து வெளியே செல்ல தயாரானபொது போது துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ராமச்சந்திரா மருத்துவமனையின் 6-ஆவது மாடியில் தீவிர சிகிச்சை பெற்று வரும் துரைமுருகனை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மற்றும் நவம்பர் மாதத்தில் இதே போல் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.