அரசு மீது பழி சுமத்தவே “ஒன்றிணைவோம் வா” திட்டத்தை தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின்! – அமைச்சர் காமராஜ்

சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஊரடங்கு அமலில் உள்ள கடந்த 65 நாட்களாக மக்களின் அத்தியாவசிய உணவு தேவைகளை அரசு சரியாக செய்து இருக்கிறது.

இதுவரை 99 %  பேருக்கு ரொக்கம், 98 % பேருக்கு உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு விட்டது.

எனவே, தமிழகத்தில் உணவு பிரச்சனையே இல்லாத ஒரு நிலையை அரசு உருவாக்கி உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா என்கிற திட்டத்தை துவங்கி உள்ளதாகவும் அதன் மூலம் அரசை செயல்பட வைப்பதாகவும் அரசியல் நாடகம் ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என்ற அவர் ஸ்டாலின் பேசிய ஒன்றிணைவோம் வா திட்டம் குறித்த காணொளியை டிவியில் காட்டினார்.

பின் பேசியவர், அரசு அனைத்து பணிகளையும் சரியாக செய்துள்ளது. இருந்தும், ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா என்பதன் மூலம், அரசு செயல்படவில்லை என்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.

ஏப்ரல் 20 அன்று திட்டம் துவங்கியது முதல் மே 13 வரை 1 லட்சம் மனுக்கள் வந்து உள்ளதாகவும், 15 லட்சம் பேருக்கு நிவாரண பொருட்களை வினியோகித்து உள்ளதாகவும் டி.ஆர்.பாலு தலைமை செயலாளரை சந்தித்து விட்டு பேட்டியளித்துள்ளார் என்று சொல்லிவிட்டு, டி.ஆர்.பாலு பேசிய வீடியோவையும் காட்டினார்.

தொடர்ந்து பேசியவர், 1 லட்சம் மனுக்கள் கொடுத்ததாக அவர் சொன்னார்.

ஆனால், 98 ஆயிரத்து 752 மனுக்கள் மட்டுமே அவர்கள் கொடுத்த மனுக்களின் எண்ணிக்கை. இந்த மனுக்களை முதல்வரின் தனிப்பிரிவு வீடு வீடாக ஆய்வு செய்தது.

அதில் எங்கேயும் இவர்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டு இல்லை என்று சொல்லி விட்டு அரசு நடத்திய ஆய்வு குறித்த வீடியோவையும் காட்டினார்.

திமுக உதவி செய்யும் என்பதற்காக மனு கொடுத்தோம், என் பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளார்கள், எங்களுடைய விபரங்களை தவறாக பயன்படுத்தி உள்ளார்கள் என்று பல மக்கள் குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவித்த அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக தவறாக அரசியல் நாடகம் செய்கிறது; இது கண்டனத்திற்கு உரியது; இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே