சென்னை வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு..!!

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார் . அவருக்கு பல இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இன்று (பிப்.,14) தமிழகம் வந்தார்.

டில்லியில் இருந்து விமானப்படை விமானத்தில், சென்னை கிளம்பிய அவர், காலை, 10:35க்கு, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அங்கிருந்து, எம்.ஐ., – 17 ஹெலிகாப்டரில், அடையாறு, ஐ.என்.எஸ்., கடற்படை தளம் வந்தார்.

அங்கு, மோடிய கவர்னர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக பாஜ தலைவர் முருகன், தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர், கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு சென்றார். 

செல்லும் வழியில், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., சார்பில் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தீவுத்திடல் அருகே செல்லும் போது, சாலையில் கூடியிருந்த தொண்டர்களை பார்த்து மோடி கையசைத்தார்.

நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும்.

விழாவில் ரூ.3770 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்து, வண்ணாரப்பேட்டையிலிருந்து, விம்கோ நகர் வரையிலான பயணிகள் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார்.

அதன்பிறகு நவீன அர்ஜூன் முக்கிய போர் பீரங்கி வண்டியை (எம்கே-1ஏ) இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

உள்நாட்டிலேயே இந்த பீரங்கி வண்டி வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, டிஆர்டிஓ-வின் சிவிஆர்டிஇ மற்றும் 15 நிறுவனங்கள், 8 ஆய்வகங்கள் மற்றும் எம்எஸ்எம்இ-க்களால் தயாரிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது திட்டங்களை தொடங்கி வைக்க நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு பிரதமர் மோடி காரில் பயணம் மேற்கொண்ட நிலையில் அரங்கிற்கு செல்லும் பொழுது சாலையில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தார்.

அதேபோல் அவர் செல்லும் வழியில் அதிமுக சார்பிலும், பாஜக சார்பிலும் கலை நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பளிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே