அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை… கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான அனுமதி தற்காலிக ரத்து!

சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனை நோயாளி ஒருவர் 19 நாள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ரூ.12.20 லட்சம் கட்டணம் வசூலித்ததை அடுத்து, தமிழக அரசு மருத்துவமனையின் அனுமதியை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்த்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, தமிழக அரசு, கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு தமிழக அரசு அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது.

மேலும், தமிழக அரசு தனியார் மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்று அதிகாரிகளால் ஆய்வுகளும் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள Bewell மருத்துவமனையில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் நோயாளி ஒருவருக்கு 19 நாள் கொரோனா சிகிச்சைக்காக ரூ.12,20,000 என அதிக கட்டனம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, Bewell மருத்துவமனைக்கு கொரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு அரசு கொரோனா நோய் தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தனியார் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்து கொரோனா நோய்க்கான சிகிச்சைகளை மக்களுக்கு வழங்கிட அனுமதி அளித்து வருகிறது.

சிகிச்சைகள் தொடர்பான உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டி நடைமுறைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது.

இந்நிலையி பொதுமக்கள் நோய் சிகிச்சை காரணமாக அதிக நிதிச்சுமைக்கு ஆளாகத வண்ணம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் அரசாணை எண்.240 மூலம் அதிகப்பட்ச கட்டணம் நிர்ணயித்து ஜூன் 6-ம் தேதி ஆணை வழங்கியுள்ளது.

கொரோனா நோய்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் அதற்காக தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் மக்கள் நல்வாழ்வு துறையினரால் கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள Bewell மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12,20,000 வசூலிக்கப்பட்ட விவரம் உறுதி செய்யப்பட்டது.

மேலும், தனியாரது சிகிச்சைக்கு அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை.

கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், Bewell மருத்துவமனைக்கு கொரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறையால் ஏற்கனவே உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மீண்டு வலியுறுத்தப்படுகிறது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே