மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் கர்ணன்.

தனுஷின் 41ஆவது படமான இப்படத்தை ‘பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இதனால் இப்படத்திற்கு எதிர்ப்பு எகிரியுள்ளது.

கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளர்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து படம் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. 

படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

அதன் படி தற்போது கர்ணன் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

அதனுடன் ரீலிஸ் தேதியும் வெளியாகியிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் தலை, மற்றும் கைகளில் ரத்தம் வழிய கைவிலங்குடன் கோபத்துடன் நிற்கிறார்.

போஸ்டரில், “நீதியின் ஆன்மா மரணம் எய்தாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே