குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும் ஏழை தாய்மார்களுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டுக்கு 15000 ருபாய் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் கூறி இருந்தார்.
இந்த திட்டத்தை துவங்கி வைக்கும் விழாவானது ஆந்திரமாநிலம் சித்தூரில் இன்று நிகழ்ந்தது.
அப்போது முதலமைச்சர் ஜெகன் மோகன் இந்த திட்டத்தை துவக்கிவைத்தார்.
பின்பு நிகழ்ச்சியின் பொழுது பேசிய அவர் இந்த திட்டத்திற்காக 6456 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கோடு இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பள்ளியின் வேலைநாட்களான ஆறு நாட்களும் மாணவர்களுக்கு வெவ்வேறு வகையான உணவுகள் வழங்கப்படும் எனவும்; இனி வரும் கல்வியாண்டில் தெலுங்கு கட்டாய பாடமாக ஆக்கப்பட உள்ளதாகவும், ஆங்கில வலி கல்வி முறை அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்துவரும் ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த புதிய அறிவிப்பு, மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த புதிய திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் இதனால், அவர்களது பெற்றோரும் பயனடைவர் என கூறப்படுகிறது.