சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு..!!

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகரின் உத்தரவிற்கேற்ப காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (செப். 14) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று பூஜ்ய நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இது தொடர்பான வாதத்தில், நீட் தேர்வுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வாதாடியதாக கூறிய அதிமுகவினரின் பேச்சை நீக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை காவலர்கள் வெளியேற்றினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2690 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே