மக்களின் பங்களிப்புடன் அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்திய ஜனநாயகம் செயல்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் சதியை முறியடித்து ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் இந்திய மக்கள் பேணிக்காப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். முன்னாக, இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார்.
அதில், இன்று ஒட்டுமொத்த நாடும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் சூழலில், பா.ஜகவோ அரசியலமைப்பை சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளது.
2018ல் ராஜஸ்தான் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை, சதி செய்து கவிழ்க்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் செய்ததை போல், தற்போது ராஜஸ்தானிலும் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றுகிறது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கள் அரசியலமைப்பு உரிமைகளை மதித்து உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என கோருகிறோம். எங்களுடன் இணைந்து ஜனநாயகத்துக்காக குரல் கொடுங்கள், என்று தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்துக்காக பேசுங்கள் #SpeakUpForDemocracy என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்து ராகுல் காந்தி வீடியோவை வெளியிட்டுள்ளார்.