எஸ்.பி.பி. உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் முற்பகல் நல்லடக்கம்..!

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் என்பதால் அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மரியாதை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.SPB Funeral at the farm house in Tamaraipakkam ..!இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் என்பதால் அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் மரியாதை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணைவீட்டில் எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதியில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2 கிலோமீட்டருக்கு முன்பாகவே தடுப்புகள் அமைக்கப்பட்டு மக்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது உடல் இன்று காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள தாமரைப்பாக்கம் பண்ணைவீட்டில், ஏற்கெனவே அவரது முன்னோர்களும் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக, உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே