யானைக்கவுனி துப்பாக்கிச் சூடு வழக்கில் கைதான 3 பேருக்கு 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த வாரம் சவுக்கார்பேட்டை யானைக்கவுனி காவல் நிலைய பகுதியில் 3 பேர் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக  குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் புனே சென்று பதுங்கியுள்ளனர்.

போலீசார் தனிப்படை அமைத்து அந்த 3 பேரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு அவர்களிடம் இருந்து கள்ளத்துப்பாக்கி மற்றும் தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் போன்ற பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டனர்.

பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தவும், அந்த கொலையில் யார்யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்த விசாரணை செய்ய போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக காலை 11.30 மணியளவில் புழல் சிறையில் இருந்த 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து வரப்பட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

15-வது நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தபட்டு காவல்துறை சார்பில் 10 நாட்கள் விசாரணை செய்யவதற்க்கான மனு அளிக்கப்பட்டது.

சற்று முன்னதாக அந்த 15-வது நீதித்துறை நீதிபதி விசாரணை நடத்திய பிறகு அவர்களை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார்.

அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க யானைக்கவுனி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் ஜெயமாலா, அவரது சகோதரர் மற்றும் கூட்டாளி ஆகியோர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் அவர்களை தேடி தனிப்படையினர் புனே சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கும் புனேவில் பதுங்கியுள்ளவர்களுக்கும் என்ன தொடர்பு, மற்றும் அவர்கள் பதுங்கியுள்ள ரகசிய இடம் குறித்தது மட்டும் இல்லாமல் கொலை செய்வதற்கு என்னென்ன விதமான திட்டங்களை திட்டினார் என்பது குறித்து விசாரிக்கவே போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் சற்றுநேரத்தில் அவர்கள் ரகசிய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விரிவான விசாரணை நடத்துவது மட்டுமில்லாமல் தலைமறைவாக உள்ளவர்கள் யார்யாரிடம் தொடர்பு வைத்துள்ளனர் என்பது குறித்த விசாரணைக்காக போலீஸ் காவல் எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே