கூடுதலாக 160 மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி..!!

சென்னையில் தற்போது தினமும் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வார நாட்களில் கூடுதலாக 160 மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி!

தமிழகத்தில் பொது முடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்பின்னர் சென்னையில் புறநகர் ரயில் இயக்கப்பட்ட நிலையில், அத்தியாவசியப் பணிகளுக்கான ஊழியா்கள் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த வகையில் முதல்ட்டமாக இயக்கப்பட்ட 40 மின்சார ரயில் சேவையில் இருந்து 120-ஆக அதிகரிக்கப்பட்டது.

அடுத்து பெண்கள், குழந்தைகளும் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த டிசம்பா் 21ஆம் தேதி முதல் சென்னையில் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை 410 ஆகவும் அதிகரித்தது.

பின்னர் தற்போது ரயில் சேவை 500ஆக அதிகரிக்கப்பட்ட நிலையில், புறநகா் ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நாளை முதல் ரயில் சேவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் இல்லாமல் செல்வதற்காக தற்போது கூடுதலாக 160 சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

இதன்மூலமாக, சென்னையில் 660 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே