பனிகாலத்தில் முகத்தை பராமரிக்க சில யோசனைகள்..!!

குளிர்காலத்தின்போது ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்று. இந்த வானிலையின்போது உடலில் நீர்ச்சத்து முக்கியம்.

நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் மாய்ஸ்சரைசர்கள் மற்றும் கிரீம்களைப் பயன்படுத்துகையில் அது உங்கள் தோலை இன்னும் நீரிழப்புக்கு உண்டாக்கும்.

இதைத் தவிர்க்க நீங்கள் இந்த குறிப்புகளைப் முயன்றி செய்யலாம்..

தண்ணீர் அருந்துவது:

குளிர்காலத்தில் நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் முகத்தை பிரகாசமாக வைத்திருக்கும். தண்ணீர் தான் நம் உடலை சுத்திரிக்க உதவும் முக்கிய பொருள்.

ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டும். குளிர்காலத்தில் தண்ணீர் தாகம் எடுக்கவில்லை என்றாலும் உடலுக்கு தேவையான தண்ணீரை குடித்தாக வேண்டும். 

தண்ணீர் நம் உடல் உறுப்புகளையும், தோலையும் பிரகாசமாக வைக்கும்.

வைட்டமின் சி:

உங்கள் உணவில் வைட்டமின் சி உள்ள உணவை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். இது சருமத்தை பராமரிக்கும் கொலாஜன் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

இது சருமத்தை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது, மேலும் சுருக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. லெமன், ஆரஞ்ச் போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

சூடான நீரில் குளிப்பதைத் தவிர்ப்பது:

சூடான நீரில் குளிப்பது உங்கள் தோலை வறண்டு போக செய்யும். ஆனால் இது முடி மற்றும் தோலில் இருந்து ஈரப்பதத்தை எடுத்துவிடும்.

சூடான நீரில் குளியல் போடுவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தவிர்க்க முடியாத சூழலில் மட்டும் வெந்நீர் வைத்து குளிக்க வேண்டும்.

மற்றபடி வெதுவெதுப்பான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ குளிக்கலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே