நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான ‘புஷ்பா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியான 15 மணி நேரத்திற்குள் 2 கோடிப் பார்வையாளர்களைக் கடந்து இந்திய சினிமாவில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள படம் புஷ்பா. இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். செம்மரக் கடத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

வருகிற டிச.17 வெளியாக உள்ள முதல் பாகத்தின் டிரைலரை நேற்று(டிச.6) படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் தமிழ் , மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் உருவான டிரைலர் மட்டுமே வெளியானது. இந்நிலையில் இன்று காலை தெலுங்கு மொழி டிரைலரை வெளியிட்டனர்.

தற்போது 5 மொழிகளில் உருவான ‘புஷ்பா’ திரைப்படத்தின் டிரைலர், அது வெளியிடபட்ட 15 மணி நேரத்திற்குள்ளாக 2 கோடிப் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.

முக்கியமாக தெலுங்கில் வெளியான 4 மணி நேரத்தில் 85 லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே