‘மாநாடு’ ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்து

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார். இந்தப் படம் தொடர்பான அனைத்துப் பணிகளுமே முடிவடைந்துவிட்டன.

சிம்புவின் கால்ஷீட் தேதிகளுக்காகக் காத்திருந்தது படக்குழு.

ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிம்புவுக்குப் பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

தற்போது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘மாநாடு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நடிக்க முடிவு செய்தார் சிம்பு.

கடந்த வாரம் இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு விட்டார் சிம்பு.

மேலும் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடவுள்ளார். 40 நாட்கள் விரதமிருந்து கோயிலுக்குச் செல்லவும் முடிவு செய்துள்ளார்.

1992-ம் ஆண்டு ‘எங்க வீட்டு வேலன்’ படத்துக்காக மாலை போட்டார் சிம்பு.

அதனைத் தொடர்ந்து சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மாலை போட்டு விரதமிருந்து ஐயப்பன் கோயிலுக்குச் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் இந்த மாற்றம் திரையுலகினர் மட்டுமல்லாது, அவரது நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரது மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே