தஞ்சை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034-ம் ஆண்டு சதய விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜன், சோழ மன்னர்களில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றவர்.
அவரின் பிறந்த நாள் ஆண்டுதோறும், சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இதன்படி ராஜராஜ சோழனின் 1034ம் ஆண்டு சதய விழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் இசை நிகழ்ச்சிகள், நாட்டியம்,பட்டிமன்றம், திருமுறை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்று விழாவின் முக்கிய நிகழ்வான யானை மீது திருமுறை வீதி உலா, சிவனடியார்கள் தேவார பாடலை பாடி வீதி உலா ஆகியவை நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்றது.
விழாவில் அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவில் பெருவுடையாருக்கு 48 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.